நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: டாக்டர் சுரேந்திரன்

ஷாஆலம்:

வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 98 தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி மானியத்தை சிலாங்கூர் அரசு வழங்குகிறது.

இந்த மானியத்தை உயர்த்தினால் தமிழ்ப் பள்ளிகள் மேலும் நன்மை அடையும்.

அதேசமயம் இந்து ஆலயங்களுக்கு 17 லட்சம் வெள்ளி, தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் பத்து லட்சம் வெள்ளி, உயர்கல்வி கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பத்து லட்சம் வெள்ளி கல்வி நிதி தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இது தவிர்த்து இந்திய சிறு தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் ஐ சிட் மூலம் வியாபார இயந்திரங்கள், முதியோர்களுக்கு நிதியுதவி, தீபாவளி காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயம் நன்மை அடையும் வகையில் சிறப்பு சலுகைகள் இருக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அவர்கள் இந்த பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset