செய்திகள் கலைகள்
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
ரியாத்:
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருவது குறித்த விவாதத்தில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் பேசிய சல்மான் கான், “இப்போது இந்திப் படம் தயாரித்து இங்கே (சவுதி அரேபியாவில்) வெளியிட்டால் அது சூப்பர் ஹிட்டாகிறது. இதே போன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் படத்தை எடுத்தால் பல நூறு கோடி அளவுக்கு வியாபாரம் நடக்கிறது.
ஏனென்றால் வெளிநாட்டிலிருந்து பலர் இங்கு வந்திருக்கிறார்கள். பலூசிஸ்தானில் இருந்து ஆட்கள் இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்... எல்லோரும் இங்கே வேலை செய்கிறார்கள்" என்று சொன்னார்.
பாகிஸ்தானையும், பலூசிஸ்தானையும் தனித்தனியாக சல்மான் கான் குறிப்பிட்டது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் 46 சதவீத இடம் பலூசிஸ்தானை உள்ளடக்கியது ஆகும். சல்மான் கானின் கருத்தை பலூசிஸ்தான் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சல்மான் கானின் கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதையடுத்து சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்திருக்கிறது.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பட்டியலில் சல்மான் கான் பெயரைச் சேர்த்து இருக்கிறது. அப்பட்டியலில் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தனது கருத்துக்கு சல்மான் கான் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
