செய்திகள் மலேசியா
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 1,711 மலேசியப் பொருட்களுக்கு 19 சதவீதத்திற்கும் குறைவான வரி விதிக்கப்படும்: தெங்கு ஸப்ரூல்
கோலாலம்பூர்:
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 1,711 மலேசியப் பொருட்களுக்கு 19 சதவீதத்திற்கும் குறைவான வரி விதிக்கப்படும்.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அப்துல் அஜீஸ் இதனை தெரிவித்தார்.
மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேற்று பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 1,711 மலேசிய பொருட்கள் 19 சதவீத குறைந்த வரி விகிதத்தை அனுபவிக்கும்.
இந்தப் பட்டியலில் செம்பனை, ரப்பர், கோகோ, பல மருந்து, விண்வெளி உபகரணங்களும் அடங்கும்.
இந்த ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கான எங்கள் மொத்த ஏற்றுமதியில் சுமார் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (US$1 = RM4.221) ஆகும்.
இது நமது மொத்த ஏற்றுமதியில் 12 சதவீதம் ஆகும் என்று அவர் நேற்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சட்டச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்ட 60 நாட்களுக்குள் குறைந்த கட்டண விகிதம் நடைமுறைக்கு வரும் என்று தெங்கு ஸப்ரூல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 9:07 am
மொஹைதின் பதவி விலக வேண்டும்; அஸ்மின் நீக்கப்பட வேண்டும்: சைபுடின்
October 26, 2025, 9:20 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயம்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
