செய்திகள் மலேசியா
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயம்
கோலாலம்பூர்:
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயமடைந்தார்.
இன்று மதியம், ஜாலான் கினாபாலுவின் வெளியேறும் இடத்திற்கு அருகில் உள்ள ஜாலான் துன் ரசாக்கில் இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறையின் உறுப்பினர் காயமடைந்தார்.
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரேசிலிய பிரதிநிதிகளின் வாகனத் தொடரணிக்கு போக்குவரத்து அதிகாரி பாதுகாப்பு அளித்துச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நின்ற காரின் பின்புறத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அந்த போலிஸ்காரர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேபோன்ற இன்னொரு விபத்தும் நடந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மற்றொரு சாலை பயனரால் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் விபத்து தொடர்பான நான்கு வினாடிகள் கொண்ட காணொலி இன்று மதியம் முதல் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன
October 26, 2025, 1:19 pm
மலேசியர்கள் திமோர் லெஸ்தேவில் தடையற்ற டேட்டா ரோமிங் சேவையை பெறுவார்கள்
October 26, 2025, 11:27 am
