நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுத்தேர்தலில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு வழங்குங்கள்: ஐபிஎப் வேண்டுகோள் 

ஈப்போ: 

ஐபிஎப் கட்சியின் தேசியத்தலைவர் லோகநாதனுக்கு செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டும். அத்துடன், இந்நாட்டில் ஐபிஎப் கட்சியின் மகத்தான மக்கள் சேவை, தேர்தல் காலங்களில் வழங்கிய கடுமையான அயராத உழைப்பை கருத்தில் கொண்டு மாநில தலைவர்களுக்கு உயரிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று இங்குள்ள தம்புன் தொகுதியின் ஐபிஎப் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கோரிக்கையை முன் வைத்தார் பேராக் ஐபிஎப் கட்சி, தம்புன் ஐபிஎப் தொகுதி செயலாளருமாகிய மகேந்திரன் தண்ணீர்மலை.

அதுமட்டுமன்றி, எதிர்வரும் பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெறலாம் என்று பல ஆரூடங்கள் இருந்தாலும், பல மாநிலங்களில் ஐபிஎப் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு சட்டமன்றம், ஒரு நாடாளுமன்றத்தில் போட்டியிட தேசிய முன்னணி தங்களுக்கு வாய்ப்பு வழங்க முன்வர வேண்டும் என்று சுமார் 200 இந்திய குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கியபோது அவர் கூறினார்.

அத்துடன், மாநில அளவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராமத்து தலைவர்களாக ஐபிஎப் கட்சியின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதோடு, ஜிஎல்சி பதவிகளும் வழங்க முற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தம்புன் ஐபிஎப் தொகுதி, பேராக் ஐபிஎப் ஆதரவுடன் தேசியத்தலைவர் டத்தோ லோகாவிற்கு முழு ஆதரவை வழங்குகிறது. அத்துடன், தேசிய முன்னணிக்கு என்றென்றும் வற்றாத ஆதரவை வழங்கும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேராக் மாநில பரிசான் நேசனல் செயலாளரும், தம்புன் அம்னோ தொகுதி தலைவருமாகிய டத்தோ அமினுடின் கலந்து சிறப்பித்தார். அவருடன், தம்புன் கவுன்சிலர் டத்தோ மஸ்லான், உயர்கல்வி கூடத்தின் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரியின் அரசியல் செயலாளர் அக்மால் ஷாரில், மெட்டல் சிம்மோர் மொழிலதிபர் வாசு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

அவர்களுடன், பெருவாஸ் ஐபிஎப் தொகுதித் தலைவர் கந்தசாமி, செயலாளர் பெரியசாமி, தைப்பிங் தொகுதி குமார், தாப்பா தொகுதித்தலைவர் தங்கமணி மற் றும் தம்புன் தொகுதித் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset