நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் சாரா, பூடி95ஐ பயன்படுத்துகிறார்; ஆனால் போலிசால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் சாரா, பூடி95ஐ பயன்படுத்துகிறார்.

ஆனால் போலிசால் இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா என வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் இந்த நாட்டில்தான் இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும் சுதந்திரமாக அவர் வாழ்கிறார்.

அரசாங்க உதவியைப் பெறுகிறார் என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதிகாரிகள் மன்னிக்க முடியாத தோல்வியை செய்துவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக, இந்திராவின் முன்னாள் கணவர் ரிதுவான் அப்துல்லாஹ் இன்னும் மலேசியாவில் இருக்கிறார்.

அவர் பூடி95,  ரஹ்மா அடிப்படைத் தேவைகள் உதவி (சாரா) போன்ற அரசாங்க உதவித் திட்டங்களிலிருந்து சலுகைகளைப் பெறுவதாகவும் கூறும் ஒரு பதிவு, இந்த வழக்கு தொடர்பாக போலிசார், சட்டத்துறை தலைவர் அலுவலகம் கையாளும் விதம் குறித்து மீண்டும் கேள்வியை எழுப்புகிறது.

கே. பத்மநாதன் என்று அழைக்கப்பட்ட ரிதுவானின் இருப்பிடத்தைக் கண்டறிய 2016 ஆம் ஆண்டு போலிசார் வெளியிட்ட அறிக்கையை, அவரது அடையாள அட்டை எண்ணுடன் குறிப்பிடுகிறது.

2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சு போலிஸ் விசாரணைகள் மூலம் ரிதுவான் நாட்டில் இல்லை என்பதைக் கண்டறிந்ததாகக் கூறும் ஒரு அறிக்கையையும் இது குறிப்பிடுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset