நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த சந்திரனுக்கு நீதி வேண்டும்; பாதுகாவலர்களின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோ முருகையா

கோலாலம்பூர்:

தாக்கப்பட்டு மறைந்த பாதுகாவலர் சந்திரனுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். 

பாதுகாவலர்களின் உயிர்களை  பாதுகாக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா கூறினார்.

காண்டோமினியம் பாதுகாவலரான மறைந்த ஆர். சந்திரனின் (54)  துயர மரணம் குறித்து நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

அவர் பணியில் இருந்த போது கொடூரமாகத் தாக்கப்பட்டு பின்னர் காலமானார்.

மற்றவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதை மட்டுமே தனது கடமையைச் செய்து வந்த ஒருவருக்கு எதிரான ஒரு கொடூரமான, மனிதாபிமானமற்ற செயலாகும்.

துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல.

சமீபத்திய ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள காண்டோமினியம், தொழிற்சாலைகள், பொது வளாகங்களில் பணியில் இருந்தபோது பாதுகாவலர்கள் தாக்கப்பட்டு, காயமடைந்து, கொல்லப்பட்டது தொடர்பான பல சம்பவங்கள் நடந்துள்ளன.

பல்வேறு தரப்பினர் கோபத்தை வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், இதுபோன்ற வழக்குகள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

இது மலேசியாவில் தனியார் துறையில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பாதுகாப்பில் கடுமையான பலவீனங்களை வெளிப்படுத்துகிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய துப்பாக்கிகளைக் கையாள்வதில் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகள் உட்பட முழுமையான, வெளிப்படையான உடனடி விசாரணையை நடத்த அதிகாரிகளை வலியுறுத்துகிறேன்.

ஆக சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியாகவும் உடனடியாகவும் எந்தவித சமரசமும் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

மறைந்த ஆர். சந்திரனின் துயர மரணம், பாதுகாப்பு பணியாளர்களின் பாதுகாப்பு, உரிமைகள், கண்ணியம் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆக இது சம்பந்தமாக, மலேசிய அரசாங்கத்தையும் உள்துறை அமைச்சையும் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வேளையில் மறைந்த ஆர். சந்திரனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ முருகையா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset