நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ சுப்பிரமணியம் போன்றோர் மறைவது இல்லை; மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பர்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ சுப்பிரமணியம் போன்றோர் மறைவது இல்லை. மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மக்கள் தலைவர் டான்ஸ்ரீஸ்ரீ சி. சுப்ரமணியத்தக் நினைவுகூரும் வகையில் அவரது 81ஆவது பிறந்த நாள் நினைவு நாளாக இன்று கொண்டாடப்பட்டது. 

மஇகாவின் முன்னாள் தேசிய துணைத் தலைவராகவும், மலேசிய அரசாங்கத்தின் முன்னாள் துணை அமைச்சராகவும், மக்கள் மனங்களில் நிலைத்த மக்கள் தலைவராகவும் இருந்த டான்ஸ்ரீ சுப்ரமணியத்தை நினைவு கூறும் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று சிறப்புரையாற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

அரசியலில் அவரது குரல் எப்போதும் உறுதியானது. அதே வேளையில் மனிதம் காத்த மனிதரும் ஆவார்.

இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவர் விதைத்த நம்பிக்கை விதைகள், அவர் தொடங்கிய நல்ல முயற்சிகள், அவர் காத்த நற்குணங்கள்
அனைத்தும் நம்மிடையே என்றும் வாழும். 

அவரின் தலைமையும் பணிவும் நமக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும். 

அவரைப் போன்றோர் மறைவது இல்லை. மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பர்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset