நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்பின் வருகையை எதிர்த்து நடந்த மோட்டார் சைக்கிள் தொடரணி போலிசார் தடுத்து நிறுத்தினர்

கோலாலம்பூர்:

டொனால்ட் டிரம்பின் வருகையை எதிர்த்துப் போராடிய மோட்டார் சைக்கிள் தொடரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் வருகையை நிராகரிப்பதற்காக தொடரணியில் சென்ற சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நேற்று இரவு சாலைத் தடுப்பில தடுத்து வைக்கப்பட்டனர்.

கம்போங் பாண்டனில் இருந்து பாலஸ்தீனக் கொடியை ஏந்திய மோட்டார் சைக்கிள் தொடரணியை அந்தக் குழு தொடங்கியது.

பின்னர் அக்குழு இரவு 10 மணியளவில் அமெரிக்க தூதரகம் அருகே நின்றது.

போலிசாரின் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும் அந்தக் குழு 10 நிமிடங்கள் கூடி, மலேசியாவை எழுப்புங்கள், டொனால்ட் டிரம்பை விரட்டுங்கள் என்ற கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மெனாரா தாபோங் ஹாஜிக்கு முன்னால் உள்ள சாலைத் தடுப்பில் அந்தக் குழு போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset