நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் மது அருந்தக் கூடாது: பிரதமர் அன்வார் கண்டிப்பு

கோலாலம்பூர்:

பள்ளிகளில் மது அருந்தக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இனி பள்ளிகளில் மதுபானம் பரிமாறக் கூடாது.

இது வகுப்பு நேரத்திற்குப் பிறகும் கூட பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும் என்று பிரதமர் கண்டிப்புடன் கூறினார். 

கல்வியமைச்சு இந்த விஷயத்தில் அதன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து வருகிறது.

பள்ளி ஒரு தனியார் பள்ளியாக இருந்தால், அது ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் நீங்கள் அரசாங்கத்தின் அதிகார வரம்பின் அளவைப் பார்க்க வேண்டும்.

ஆனால், அந்தப் பள்ளி அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்தால், இந்தக் கொள்கைகளை மீறக்கூடாது.

ஈப்போவில் உள்ள ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமீபத்திய  இரவு உணவில் பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் மதுபானம் குறித்து பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் பேசிய பிரதமர் இவ்விவகாரத்தில் நாங்கள் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. ஆனால் இதுவொரு கட்டொழுங்கு விஷயமாகும் என்று கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset