நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடியின் வீட்டு வேலி அருகே சந்தேகத்திற்கிடமான கார் நிறுத்தப்பட்டுள்ளது: பாஸ்

கோலாலம்பூர்:

பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஹாடியின் வீட்டு வேலி அருகே சந்தேகத்திற்கிடமான கார் நிறுத்தப்பட்டுள்ளது.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தகியூடின் ஹசான் இதனை கூறினார்.

கடந்த மாதம் மாராங்கில் உள்ள ருசிலா மசூதியில் சந்தேகத்திற்கிடமான கமாண்டோ பாணி செயல்பாடு நடந்தது.

இதற்கு உடனடியாக உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும்.

மேலும் சிசிடிவி காட்சிகள் மிகவும் சந்தேகத்திற்கிடமான தன்மை, நடத்தை, அசைவுகளைக் காட்டியுள்ளது.

இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹாடி அவாங், அவரது குடும்பத்தினர், உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பல்வேறு அனுமானங்களும் அடங்கும்.

எனவே உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

முன்னதாக இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 19 அன்று ருசிலா மசூதியில் நடந்தது.

இது பாஸ் தலைவரின் இல்லத்திற்கும் அடுத்ததாக உள்ளது.

அவர் சந்தேகத்திற்குரியதாக விவரித்த ஐந்து விஷயங்களைப் பட்டியலிட்டார்.

குறிப்பாக பெண்கள் கழிப்பறைக்கு அருகிலுள்ள பெண்கள் பிரார்த்தனை அறைக்குள் சாதாரண உடையில் மூன்று ஆண்கள் அவசரமாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் நுழைவதைக் காண முடிந்தது.

ருசிலா மசூதியின் முன்புறத்தில், ஹாடி அவாங் வீட்டின் வேலியில் இரண்டு ஆண்களுடன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset