நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங் ஜெயாவில் மீண்டும் வலுவாக சேவைகளை வழங்க ஜிவி ரைட் உறுதி கொண்டுள்ளது: கபீர் மான்ட்

சுபாங் ஜெயா:

சுபாங் ஜெயாவில் மீண்டும் வலுவாக சேவைகளை வழங்க ஜிவி ரைட் உறுதி கொண்டுள்ளது.

ஜிவி ரைட் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் மான்ட் இதனை கூறினார்.

உள்ளூர் இ-ஹெய்லிங் சேவை நிறுவனமாக  ஜிவி ரைட்  விளங்கி வருகிறது.

இந்நிறுவனம் சுபாங் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்களிடமிருந்து சமீபத்திய கருத்துகள், கவலைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

எங்கள் நிறுவனம் ஆரம்ப வெளியீட்டின் போது எதிர்கொண்ட அறைகூவல்களை ஒப்புக் கொள்கிறது.

அதன் செயல்பாடுகள், சேவை தரம், ஓட்டுநர் ஈடுபாட்டை வலுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதும், ஓட்டுநர்கள், பயணிகளுக்கு உண்மையான மதிப்பை வழங்குவதும் எங்கள் தற்போதைய கவனமாக உள்ளது.

எங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து நாங்கள் பலவற்றை கற்றுக் கொண்டோம்.

இந்த முறை சிறந்த அமைப்புகள், மேம்பட்ட ஆதரவு,  மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் நாங்கள் வலுவாக மீள்வோம்  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடுமையான சேவை தரநிலை இயக்க நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் நிறுவனம் அதன் உள் குழுவை மறுசீரமைத்துள்ளது.

அத்துடன் மென்மையான பயனர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுபாங்கில் அதன் அதிகாரப்பூர்வ மறு நுழைவுக்குத் தயாராகும் போது, ​​வெளிப்படையான தகவல் தொடர்பு, உண்மையான சமூக ஈடுபாட்டிற்கு ஜிவி ரைட் உறுதிபூண்டுள்ளது.

முன்னர், சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் ஏப்ரல் முழுவதும் ஜிவி ரைட் இலவச பயண சேவை பிரச்சாரத்தைத் தொடங்கியது.

இந்த சேவை 500,000 ரிங்கிட் மானியத் தொகைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது.

ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதுடன் முடிவடையும்.

இதன் மூலம் சுபாங் ஜெயாவில் வசிப்பவர்கள் வசதியான, பாதுகாப்பான, நம்பகமான போக்குவரத்து சேவைகளைப் பெறுவதில் இந்த சலுகை பயனளிக்கும் என்று ஜிவி ரைட் நம்புவதாக கபீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset