நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: போலிஸ்

கோலாலம்பூர்:

ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டு கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து உலகத் தலைவர்களுக்கும் அவர்களது பிரதிநிதிகளுக்கும் போலிஸ் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனப் பிரதமர் லி கியாங்கிற்கு மட்டுமல்லாமல், 

ஆசியான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிற உரையாடல் கூட்டாளர்களுக்கும் மாநாடு முழுவதும் சிறப்பு, அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கோலாலம்பூர் போலிஸ் அவர்களின் பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதை உறுதி செய்யும்.

ஒவ்வொரு தலைவருக்கும் சிறப்பு நடவடிக்கை பிரிவு, போலிசாரின் சிறப்புப் பிரிவான பாதுகாப்புப் பிரிவு, சிறப்பு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset