
செய்திகள் மலேசியா
பந்தாய் செனாங்கில் இரண்டு இந்தியர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர்
லங்காவி:
பந்தாய் செனாங் கடற்கரையில் சிலாங்கூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.
லங்காவி துணை போலிஸ் தலைவர் சம்சுல்முடின் சுலைமான் இதனை உறுதிப்படுத்தினார்.
கடற்கரையில் உற்சாகமாக நேரத்தை கழித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சி, கடற்கரை நீரில் மூழ்கி இறந்த இருவர் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சோகமாக மாறியது.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் நடந்தது.
இந்த சம்பவத்தில் பலியானவர்கள் சிலாங்கூரைச் சேர்ந்த ஆர். நுரேந்திரன் (38), எம். சுரேஷ் (46) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு மாலை 6.05 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
பாதிக்கப்பட்ட இருவரையும் பொதுமக்கள் ஜெட் ஸ்கை, மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் இருவரும் இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக லங்காவி தீவுக்கு வந்ததுள்ளனர்.
சம்பவத்திற்கு முன்பு ஒரு பொது கடற்கரைப் பகுதியில் குளித்ததாக நம்பப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகள் கண்டறிந்துள்ளது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 4:25 pm
பள்ளிகளில் மது அருந்தக் கூடாது: பிரதமர் அன்வார் கண்டிப்பு
October 23, 2025, 3:23 pm
ஹாடியின் வீட்டு வேலி அருகே சந்தேகத்திற்கிடமான கார் நிறுத்தப்பட்டுள்ளது: பாஸ்
October 23, 2025, 3:02 pm
சுபாங் ஜெயாவில் மீண்டும் வலுவாக சேவைகளை வழங்க ஜிவி ரைட் உறுதி கொண்டுள்ளது: கபீர் மான்ட்
October 23, 2025, 1:22 pm
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: போலிஸ்
October 23, 2025, 11:07 am
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் மோடி இணையம் வாயிலாக பங்கேற்கிறார்: பிரதமர் அன்வார்
October 23, 2025, 10:10 am
மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது
October 23, 2025, 10:09 am