நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலுக்கான கெஅடிலான் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் கட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு:

சபா தேர்தலுக்கான கெஅடிலான் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் கட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த 17ஆவது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பல அதிகாரப்பூர்வ அரசாங்க விஷயங்கள் முடிந்த பிறகு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த மாதம் சபா தேர்தலை எதிர்கொள்ள, அதிகாரப்பூர்வ அமைச்சக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கெஅடிலான் தலைமை உறுப்பினர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி உட்பட இரண்டு நாள் பயணத்திற்காக டத்தோஸ்ரீ ரமணன்  சபாவிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset