நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் மோடி இணையம் வாயிலாக பங்கேற்கிறார்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மலேசியாவும் இந்தியாவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மிகவும் விரிவான மட்டத்திற்கு வலுப்படுத்த விரும்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து நேற்று இரவு தொலைபேசி அழைப்பு மூலம் இந்த நோக்கம் வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

வர்த்தகம், முதலீட்டுத் துறைகளிலும், தொழில்நுட்பம், கல்வி, வட்டார பாதுகாப்புத் துறைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பிலும் இந்தியா மலேசியாவின் முக்கிய பங்காளியாகத் தொடர்கிறது.

மேலும் இந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சி மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் மோடியுடனான கலந்துரையாடல் தொட்டதாகக் கூறினார்.

அந்த நேரத்தில் இந்தியாவில் இன்னும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையைக் கருத்தில் கொண்டு, மோடி இணையம் வாயிலாக உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அவர் கூறினார்.

மோடியின் இந்த முடிவை நான் மதிக்கிறேன்.

அவருக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும், மிகவும் அமைதியான, வளமான வட்டாரத்தை நோக்கி ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset