நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சிமாநாட்டில் யாரேனும் இடையூறு ஏற்படுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47வது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, யாரேனும் இடையூறு ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால், பிரச்சனையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கோலாலம்பூர் காவல்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்தை சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சஸ் வலியுறுத்தினார்.

“நிகழ்வை சீர்குலைக்கும் அல்லது நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அணுகல் பாதைகளைத் தடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் யாரும் எடுக்கக் கூடாது.

“மிக முக்கியமாக, பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி என்று அவர் இங்குள்ள கேஎல் போலீஸ் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset