நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மண் லோரி மீது கார் மோதிய சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்

ஷாஆலம்:

மண் லோரி மீது கார் மோதிய சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின்செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

இன்று காலை, இங்கு அருகிலுள்ள கிள்ளான்  ஜாலான் மேரு காப்பார் நகரத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மண் ஏற்றிச் சென்ற லோரி மீது வாகனம் மோதியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.

இன்று காலை 9.07 மணிக்கு விபத்து குறித்து தனது துறைக்கு அழைப்பு வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

அங்கு நான்கு வாகனங்கள், அதாவது ஒரு மண் லோரி, ஒரு குப்பை லோரி,  இரண்டு பெரோடுவா மைவி கார்கள் விபத்தில் சம்பந்தப்பட்டன.

விசாரணையில் விபத்தில் மூன்று வயது வந்த ஆண் பாதிக்கப்பட்டவர்கள் (வெளிநாட்டினர்), 34 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் காயமடைந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் வாகனத்திலிருந்து அகற்றப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர்  தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset