நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தற்போதுள்ள தேசிய வருவாய் இன்னும் விவேகமான முறையில் நிர்வகிக்கப்படாவிட்டால், தொடர்ந்து கசிவு ஏற்படுகிறது.

இதனால் மக்கள் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்படவில்லை.

புதிய வரிவிதிப்பு மூலம் வருவாயை அதிகரிப்பது பற்றி பேசுவதற்கு முன், அரசாங்கம் முதலில் நிர்வாக அமைப்பை சுத்தம் செய்ய வேண்டும்

இதனால் மக்களின் பணத்தில் ஒவ்வொரு சதமும் வெளிப்படையாகவும் திறம்படவும் செலவிடப்படும்.

இதுவரை சேகரிக்கப்பட்ட வருவாய் முறையாக செலவிடப்படாதபோது நாம் ஏன் வரிகளை விதிக்க வேண்டும்?.

சேகரிக்கப்பட்ட வருவாய் முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
கசிவு இல்லை என்றும் நாம் ஏன் கருத வேண்டும்? என்று இன்று பிஎன்பி அறிவு மன்றத்தில் பேசியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset