
செய்திகள் மலேசியா
துன் மகாதீருக்கு உடல்நிலை சரியில்லை: அவதூறு வழக்கு விசாரணை 30 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது
ஷாஆலம்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான துன் டாக்டர் மகாதீரின் அவதூறு வழக்கின் முதல் நாள் விசாரணை இன்று 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்தன.
100 வயதான முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் முஹம்மது ரபீக் ரஷீத் அலி, வழக்கை ஒத்திவைக்கக் கோரியதைத் தொடர்ந்து சுருக்கமான விசாரணை தொடர்ந்தது.
முதல் வாதியின் சாட்சியாக டாக்டர் துன் மகாதீர், உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் டத்தோ டொனால்ட் ஜோசப் பிராங்க்ளினிடம் தனது உடல்நிலை குறித்து கூறினார்.
நான் மருந்து உட்கொள்வதால் எனக்கு முழு உடல்நிலை இல்லை. எனது ஆற்றல் முழுமையாக மீளவில்லை என்று அவர் கூறினார்.
அன்வாரின் வழக்கறிஞர் ரஞ்சித் சிங், இந்த காரணத்தை எதிர்க்கவில்லை.
பின்னர் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் டொனால்ட் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:25 pm
தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை: பிரதமர்
October 21, 2025, 8:41 pm
தேசிய பொருளாதாரத் தலைவராக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படும்: ஜாஹித்
October 21, 2025, 8:40 pm
பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
October 21, 2025, 8:39 pm
என் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டது: நஜிப்
October 21, 2025, 4:14 pm