நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான மாமன்னரின் ஆணையை ஏற்றுக் கொண்டால் மொஹைதின் பிரதமராகி இருக்கலாம்: வான் அஹ்மத் பைசால்

கோலாலம்பூர்:

ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான மாமன்னரின் ஆணையை ஏற்றுக் கொண்டால் டான்ஸ்ரீ மொஹைதின் பிரதமராகி இருக்கலாம்.

மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மர் பைசால் வான் அகமது கமால் இதனை கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு  ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க 16ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா முன்வைத்த முன்மொழிவை தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் ஏற்றுக்கொண்டால், அவர் பிரதமராகும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.

அந்த நேரத்தில் மொஹைதின் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், பிரதமர் பதவிக்கு தேசியக் கூட்டணி தலைவருக்கும் நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையில் சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

கட்சித் தலைமையின் விளக்கத்திலிருந்து எனக்குப் புரிகிறது.

சுழற்சி இருக்கும் என்று தெரிகிறது.பாதி பதவிக் காலம் அன்வார், பாதி பதவிக் காலம் மொஹைதின் என தெரிகிறது.

ஏனென்றால் தேசியக் கூட்டணி, நம்பிக்கை கூட்டணி இரண்டும் சமமாக வலிமையானவை.

அதுதான் முன்மொழியப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset