நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பொருளாதாரத் தலைவராக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படும்: ஜாஹித்

புத்ராஜெயா:

நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தினார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  39.5 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது.
மில்லியன் கணக்கான மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் திறந்து விட்டது.

எனவே, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தின் வெற்றி, இந்தத் துறை போட்டித்தன்மையுடனும், புதுமையாகவும், நிலையானதாகவும் இருக்க அதிகாரம் அளிக்கும் திறனைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

தெளிவான வழிகாட்டுதலையும் விரிவான கொள்கையையும் உறுதி செய்வதற்காக,

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய தொழில்முனைவோர், மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

தேசிய தொழில்முனைவோருக்கான புதிய கொள்கைகள் மற்றும் உத்திகளைப் பற்றி விவாதித்தேன் என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset