
செய்திகள் மலேசியா
வர்த்தகம், பிராந்திய நிலைத்தன்மை, காசா நெருக்கடி குறித்து ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூ:
மலேசியா அக்டோபர் 26 முதல் 28 வரை நடத்தும் 47வது ஆசியான் உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு உறவுகள், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் மலேசியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த, குறிப்பாக வர்த்தகம், முதலீடு, காசாவின் நிலைமை மற்றும் பிராந்திய அமைதி முயற்சிகள் உள்ளிட்ட சர்வதேச கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அன்வர் கூறினார்.
“நாங்கள் இரண்டு முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அவர் மிகவும் அன்பானவர், மிகவும் ஆதரவானவர், மேலும் அவர் வர்த்தக முதலீடுகளில் மலேசியாவின் நலன்களைப் பாதுகாக்க உறுதியளித்துள்ளார்.
அதே போல் மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும், உலகிற்கும் எது நல்லது என்று நான் கருதுகிறேன் என்பது குறித்த எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன் என்றார்.
“... (காசாவை) பாதிக்கும் பிரச்சினைகள் உட்பட. அவரது சில முயற்சிகளுக்கு அவரைப் பாராட்டுகிறேன். உங்களுக்கு என்ன தயக்கங்கள் இருந்தாலும், காசாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் சிலவற்றையாவது நிறுத்துவதில் டிரம்ப் பெரும் சேவை செய்தார் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
"ஆனால், அமைதி நிலவுவதையும், நீதி நிலவுவதையும், இறுதியில் பாலஸ்தீனியர்களின் நியாயமான நலன்கள், அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்வதே எங்கள் சவால்," என்று இன்று பிஎன்பி அறிவு மன்றம் 2025 இல் தனது முக்கிய உரையை ஆற்றிய போது அன்வர் கூறினார்.
அவ்வப்போது கொள்கை வேறுபாடுகள் இருந்தபோதிலும் அமெரிக்காவுடனான மலேசியாவின் உறவு வலுவாக உள்ளது என்றும், இரு நாடுகளும் ஆழமான பொருளாதார, இராஜதந்திர உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து முக்கிய நாடுகளுடனும் நட்புடன் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு சமநிலையான, கொள்கை ரீதியான வெளியுறவுக் கொள்கையை மலேசியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
“ஒரு வர்த்தக நாடாக, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் லத்தீன் அமெரிக்கா, தென்னாப்பிரிக்காவுடனும் நாங்கள் உறவில் முன்னேறி இருக்கிறோம்.
“அதனால்தான், ஆசியான் சகோதரத்துவ கட்டமைப்பிற்குள் முதல் முறையாக, பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென்னாப்பிரிக்காவின் அதிபர் ரமபோசா ஆகியோர் இங்கு வந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஆசியான் கட்டமைப்பின் கீழ் உலகளாவிய கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மலேசியா இந்த கூட்டத்தை கருதுகிறது என்று அன்வர் கூறினார். இது முக்கிய பொருளாதாரங்களுக்கிடையேயான உரையாடல், ஒத்துழைப்புக்கான தளமாக தொடர்ந்து செயல்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று மலேசியா, ஜப்பான், தென் கொரியாவுக்கு பயணம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் "சீனாவுக்கு நல்லது செய்ய" விரும்புவதாகவும் கூறி இருக்கிறார்,
47வது ஆசியான் உச்சி மாநாடு, அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இதில் 10 ஆசியான் உறுப்பு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களும், அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்டநாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:25 pm
தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை: பிரதமர்
October 21, 2025, 8:41 pm
தேசிய பொருளாதாரத் தலைவராக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படும்: ஜாஹித்
October 21, 2025, 8:40 pm
பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
October 21, 2025, 8:39 pm
என் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டது: நஜிப்
October 21, 2025, 4:25 pm
துன் மகாதீருக்கு உடல்நிலை சரியில்லை: அவதூறு வழக்கு விசாரணை 30 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது
October 21, 2025, 4:14 pm