நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்

கோலாலம்பூர்:

பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்.

சட்டத் துறை அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது

கடந்த வாரம் டாமன்சாராவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவியை 14 வயது மாணவன் கொலை செய்தான்
அம்மாணவர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்.

விசாரணை ஆவணங்களை மதிப்பாய்வு செய்ததில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் மீது குற்றம் சாட்ட போதுமான அடிப்படை உள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் சம்பந்தப்பட்ட மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் அக்டோபர் 22 நாளை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், சந்தேக நபரால் பலமுறை குத்தப்பட்ட பின்னர், 16 வயதான யாப் ஷிங் சூன் பள்ளியின் கழிப்பறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset