நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலிம் பட்டாசு வெடி விபத்து தொடர்பில் 2 பேர் கைது

கூலிம்:

கூலிம் பட்டாசு வெடி விபத்து தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர் சுல்கிஃப்லி அசிசான்  இதனை தெரிவித்தார்.

தீபாவளி கொண்டாட்டங்களுடன் இணைந்து கூலிமின் பாயா பெசாரில் பட்டாசு வெடித்ததில் 22 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்த 22 வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதை அடுத்து இன்று தாமான் செனாங்கின், பாயா பெசாரில் இரண்டு சந்தேக நபர்கள் போலிசார் கைது செய்தனர்.

முதல் கைது கோலாலம்பூரின் பண்டார் பாரு செந்தூலைச் சேர்ந்த 34 வயதுடைய நபரை உள்ளடக்கியது.

அவர் வாடிக்கையாளர் சேவை ஊழியராக பணிபுரிகிறார். அவர்  குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளார்.

இரண்டாவது சந்தேக நபர், லூனாஸ், ஜாலான் பாயா பெசார் என்ற முகவரியைக் கொண்ட 23 வயது இளைஞர், கடை உதவியாளராகப் பணிபுரிபவரும் ஆவார், 

அவருக்கும் குற்றப் பதிவு உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset