நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்களுக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம்

புது டெல்லி:

இந்திய நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களின் தர்னா போராட்டத்துக்கு எதிராக பாஜவினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்பிக்கள் தினசரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த இடத்துக்கு அருகே அவர்களுக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் சிலர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, எதிர்க்கட்சி எம்.பி.க்களை நோக்கி அவர்கள் நடந்து சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எதிர்க்கட்சிகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்தவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்று பாஜக உறுப்பினர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset