நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூரில் யானைகள் நடமாட்டம்

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தில் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 3 யானைகள் பிடிக்கப்பட்டுள்ளன.

யானைகள் நடமாட்டம் குறித்து உள்ளூர்வாசிகளும் விவசாயிகளும் புகார் கொடுத்ததால் அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலில் பெண் யானை ஒன்று ஜாலான் மெர்சிங் -குளுவாங் (Jalan Mersing-Kluang) பகுதியில் பிடிக்கப்பட்டது.

சில நாள்கள் கழித்து ஓர் ஆண் யானையும் பெண் யானையும் தாமான் வாவாசான் காஹாங் செம்பனைத் தோட்டம் அருகே பிடிக்கப்பட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து யானைகளின் நலனைப் பாதுகாப்பது வன அதிகாரிகளின் நோக்கம் என்பதால் அவற்றை பதுகாப்பாக பிடிக்கப்பட்டன என்றார் ஒரு வனத்துறை அதிகாரி.

பிடிக்கப்பட்ட 3 யானைகளும் அவற்றின் இயற்கை வாழ்விடத்திற்கு மாற்றப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset