செய்திகள் கலைகள்
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
சென்னை:
துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
இதில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ராணாவின் ஸ்பிரிட் மீடியா, துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இந்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘லோகா’ படம் பெற்ற மாபெரும் வெற்றி காரணமாக ‘காந்தா’ படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இந்தத் தொடரை இயக்கியவர் தான் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். இப்போது ‘காந்தா’ படத்தை அவர் இயக்குகிறார்.
தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 3:40 pm
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அமீர்
May 21, 2026, 5:29 pm
மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார் ராதிகா
May 19, 2026, 9:36 pm
இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்தது
May 14, 2026, 5:07 pm
கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி கண்ணீர்
May 13, 2026, 5:17 pm
இயற்கையும் கலையும் கை கோர்க்கும் அதிசயம்: திறந்தவெளி கலை அரங்காக மாறும் லங்காவி
May 7, 2026, 6:14 pm
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்
May 4, 2026, 4:05 pm
