
செய்திகள் மலேசியா
நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக, சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
சமூக மக்கள் நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக, சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.
தீபத் திருநாளைக் கொண்டாடும் மலேசிய வாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்த ஒளிவிளக்குப் பண்டிகை, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வளப்பமான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கட்டியம் கூறுவதாக அமைய வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையை நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நம்மிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கு இந்தத் தீபத் திருநாள் மிகமிக அவசியம்.
தவிர, நமது சமய பாரம்பரியத்தை வழிவழி கட்டிக்காப்பதற்கும் இத்தகைய பண்டிகைகள் துணைபுரியும்.
அதேவேளை, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்ற இந்தத் திருநாள் தொடர்பில் நம் ஆற்றலையும் நிதி சேமிப்பையும் அதிகமாக விரயமாக்கி விடாமல், நாட்டின் பொருளாதார நிலையைக் கருதி சிக்கனமாக, அதேவேளை சீராகக் கொண்டுடாட வேண்டும் என்று இந்துக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இருக்கப்பட்ட இந்துக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம்.
அதேவேளை பி40 பிரிவினர் தங்கள் வசதிக்கு ஏற்ப தீபாவளியை கொண்டாடலாம்.
தீபாவளிக்கு அதிகமாக செலவு செய்து விட்டு பிறகு கஷ்டப்பட வேண்டியிருப்பதை பி40 பிரிவினர் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm
நம்பிக்கை ஒளியான தீப ஒளி இந்திய சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 19, 2025, 10:36 am