நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபத்திருநாளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதன் பெருமையைப் பிறரும் உணருமாறு பெருநாளை கொண்டாடுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

தீபத்திருநாளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதன்  பெருமையைப் பிறரும் உணருமாறு பெருநாளை கொண்டாடுவோம்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

2025 தீபத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இருள் நீங்கி ஒளி பிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் உறவுகளோடு இணைந்து மகிழ்ச்சியாக, அன்பும் ஒற்றுமையும் பொழியும் சூழலில் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

பண்டிகைகள் நமது பண்பாட்டின் பிரதிபலிப்பாகும். அவை மனிதநேயம், ஒருமைப்பாடு, நன்மை எனும் மூன்று ஒளிவிளக்குகளை நம் வாழ்க்கையில் ஏற்றுகின்றன. 

தீபத்திருநாளின் தத்துவம் நன்மை வெற்றி பெறும், தீமை மறையும் என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

பல இனங்கள் வாழும் நம் மலேசியாவில் ஒளி பரப்பும் ஒற்றுமை விளக்காக நமது கொண்டாட்டம் விளங்கட்டும். 

எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை அணிதல்,பெரியோரை வணங்குதல் இவை எல்லாம் வாழ்வின் ஒழுக்கத்திற்கான பாடங்கள். 

அவற்றின் ஆழ்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு தீபத்திருநாள் பெருமையைப் பிறரும் உணருமாறு கொண்டாடுவோம் என்று அவர் கூறினார்.

இருள் நீங்கும் தீபம், இனிமை பூக்கும் நெஞ்சம்,
நன்மை மலரும் நாள், நல் எண்ணம் விதைக்கும் நாள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset