நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது: ரபிசி

கோலாலம்பூர்:

பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

இந்தப் பிரச்சினை முழு சமூகத்தையும் உள்ளடக்கியது.

மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

கல்வி அமைச்சையும் கல்வி அமைச்சரையும் திட்டுவது, இப்போது உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது நல்லதாகத் தெரியலாம்.

ஆனால் அது தீர்வாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சமூகப் பிரச்சினை. 

ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பெற்றோருக்கு., ஒவ்வொரு ஆசிரியருக்கும் என அனைவருக்கும் அதில் பங்கு உள்ளது.

எனவே, பள்ளிகளில் இது எப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு வருவதற்கு முன், ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் முதலில் கண்ணாடியில் தம்மைப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset