நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிங்கப்பூரில் இறந்த பாலிவுட் இசைக்கலைஞர் ஸுபின் கார்க்கின் மரண விசாரணை 3 மாதங்கள் வரை நீடிக்கலாம்: காவல்துறை

கௌஹாத்தி:

சிங்கப்பூரில் மரணமடைந்த பாலிவுட் இசைக்கலைஞர் ஸுபின் கார்க் (Zubeen Garg) எப்படி மாண்டார் என்பதை விசாரிக்க 3 மாதங்கள் வரை எடுக்கலாம் என்று காவல்துறை கூறியுள்ளது. 

52 வயது கார்க் சென்ற மாதம் 19ஆம் தேதி மாண்டார். 

இசை நிகழ்ச்சிக்காகச் சிங்கப்பூர் வந்திருந்த அவர் St John's தீவில் முக்குளிக்கச் சென்றதாகக் கூறப்பட்டது. 

அப்போது அவர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

கார்க்கின் மரணத்தின் பின்னணியில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.

எனினும் அதற்கு விளக்கம் கேட்டு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குரல் எழுந்துள்ளது. கார்க் அங்கு மிகவும் பிரபலமான கலைஞர். 

முக்குளிக்கச் சென்றபோது அவர் மூச்சுத் திணறி மாண்டதாக முதற்கட்ட அறிக்கைகள் வெளியாயின. 

அவர் மூழ்கி மாண்டதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா கூறியிருந்தார். 

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset