
செய்திகள் கலைகள்
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
புக்கிட் ஜாலில் -
பீட் தலைவன் எனும் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார். செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.
மலேசியாவில் அதிகமான இந்திய டிஜே கலைஞர்கள் உள்ளனர்.
அதே வேளையில் இத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். இவர்களின் திறமைகளை வெளிப்படுத்து ஒரு தளம் தேவை.
மேலும் இசைத்துறையில் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தை பெற்றுத் தர இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போட்டியின் மாபெரும் இறுதி சுற்று புக்கிட் ஜாலிலில் நடைபெற்றது.
போட்டிக்கு முன்னதாக சைக்கோமேட்ரா, சந்தேஷ், அர்வின் ராஜ் போன்ற நாட்டிலிருந்து அழைக்கப்பட்ட கலைஞர்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மேடையை சூடேற்றினர்.
இப்போட்டியில் டிஜே நேஷ் எனும் ஷவினேஸ் முதல் நிலையில் வெற்றி பெற்றார். முதல் பரிசான 5,000 ரிங்கிட் உட்பட இதர பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டது.
டிஜே போ எக்ஸ் எனும் தினேஷ் குமார், டிஜே ஜிஜி எனப்படும் ஜார்ஜ் ஹாரிசன், டிஜே தர்ஷ் எனும் ஸ்ரீ தர்ஷன், டிஜே செனா எனும் அருள் செல்வன், டிஜே ஸ்டிட்ச் எனும் டர்வின் ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
October 3, 2025, 10:40 pm