நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலையான, வளமான மலேசியாவை வடிவமைப்பதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் வேண்டும்: ஹஜ்ஜா ஹனிபா

கோலாலம்பூர்:

நிலையான, வளமான மலேசியாவை வடிவமைப்பதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் வேண்டும்.

பொருளாதார துணையமைச்சர் டத்தோ ஹஜ்ஜா ஹனிபா ஹஜர் தைப் கூறினார்.

கேஎஸ்ஐ ஆசிய பசிபிக், கோலாலம்பூர் பொருளாதார மன்றத்தின் மூலோபாய நிறுவனத்துடன் இணைந்து APPGM-SDG ஏற்பாடு செய்த 4ஆவது மலேசியா நிலைத்தன்மை தலைமைத்துவ உச்ச நிலை மாநாடு இன்று நடைபெற்றது.

நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றி இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

மேலும் மலேசியாவின் முன்னேற்றத்தை மதிப்பிடவும் இந்த உச்சிமாநாடு கொள்கை வகுப்பாளர்கள், பெருநிறுவனத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், வர்த்த சமூகங்களை இம்மாநாடு ஒன்றிணைத்தது.

13வது மலேசியா திட்டம், மடானி பொருளாதாரத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப, நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதில் அரசாங்கம், தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் இடையே இராஜதந்திர ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனிடையே ஒவ்வொரு கொள்கை, திட்டம், ஒத்துழைப்பு, உள்ளடக்கிய  நிலையான மலேசியாவை உருவாக்குவதற்கு பங்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு அமைச்சுகள், மாநில அரசாங்கங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் முழுவதும் அரசாங்க முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் பொருளாதார அமைச்சகத்தின் ஒரு தலைவராக அதன் பங்கை வகிக்கும்.

13ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகள் மூலம் அரசாங்கத்தின் திட்டமிடல், வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது.

இதனால் அதன் செயல்படுத்தல் மிகவும் நடைமுறை, உள்ளடக்கிய நிலையானதாக இருக்கும்.

மக்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான சமநிலையான தேசிய வளர்ச்சிக்காகவும் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சருக்கு பொருளாதார வியூக மன்றத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் நினைவுப் பரிசு வழஙகி சிறப்பு செய்தார்.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset