நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி பரிசாக ஹைலண்ட்ஸ் தோட்ட ஆலய நிலத்திற்கு ஒப்புதல் கிடைத்தது: குணராஜ்

கிள்ளான்:

தீபாவளி பரிசாக ஹைலண்ட்ஸ் தோட்ட ஆலய நிலத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

ஹைலண்ட்ஸ் தோட்டம் என்று முன்னர் அழைக்கப்பட்ட புக்கிட் திங்கி கிளாங்கின் மக்கள் ஆலய நிலத்திற்கான ஒப்புதலை இறுதியாகப் பெற்றுள்ளனர்.

இது ஒரு நீண்ட போராட்டமாக இருந்தது.

ஆனால் அனைத்து அரசு நிறுவனங்களும் இப்போது தங்கள் ஆட்சேபனையில்லா அனுமதியை வழங்கியுள்ளன.

இது அத்தோட்ட மக்களுக்கான தீபாவளி பரிசாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு சரியான நேரத்தில், எனது கோரிக்கையை விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கனவை நனவாக்க உதவியதற்காக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, சிலாங்கூர் லிமாஸ் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

மேலும் இவ்விவகாரத்தில் என்னுடன் இணைந்து செயலாற்றிய ஆலய குழு செயலாளர் மகேந்திரனுக்கும் பாராட்டுகள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset