நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டியின் மாபெரும் இறுதி சுற்று இன்று புக்கிட் ஜாலில் நடைபெறுகிறது: குணராஜ்

செந்தோசா:

சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டியின் மாபெரும் இறுதி சுற்று இன்று புக்கிட் ஜாலில் நடைபெறுகிறது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

இந்திய சிறார்களை இசை, பாடல் துறையில் சாதிக்க வேண்டும் என இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இத்துறைகளில் சிறார்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது அதன் முக்கிய நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் 5ஆவது ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

தமிழ் கலைஞர்கள் மன்றம், பயணங்கள் தொடரும் இயக்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த போட்டி நடைபெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இப்போட்டி பல சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

பல சவால்களை கடந்து நமது சிறுவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இப்போட்டியின் பிரமாண்ட இறுதி சுற்று இன்று அக்டோபர் 11ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

ஆகவே சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் திரளாக வந்து நமது சிறுவர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.

மக்களின் ஆதரவு தான் நமது போட்டியாளர்களை அடுத்து நிலைக்கு கொண்டு செல்லும் என குணராஜ் கூறினார்.

முன்னதாககடந்த 4  ஆண்டுகள் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைத்துலக 
போட்டியிலும் சாதித்துள்ளனர்.

குறிப்பாக  இளம் பாடகி ஹேமித்ரா இந்த போட்டியின் வாயிலாக தான் தனது பயணத்தை தொடங்கினார் என குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset