நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரித்தால் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் குறித்து சுகாதார அமைச்சும் கல்வியமைச்சும் விவாதித்து முடிவு செய்யும்: சூல்கிப்ளி

கோலாலம்பூர்:

இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரித்தால் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் குறித்து சுகாதார அமைச்சும் கல்வியமைச்சவும் விவாதிக்கின்றன.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா கிளஸ்டர்களின் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் உட்பட, மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க சுகாதார அமைச்சு கல்வியமைச்சகத்துடன் விவாதிக்கும்.

பெரும்பாலான தொற்றுநோய்கள் பள்ளிகள்,  மழலையர் பள்ளிகளில் கண்டறியப்படுகிறது.

இதன் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், பள்ளி மூடல்கள் குறித்த எந்தவொரு முடிவும் கல்வி அமைச்சின் அதிகார வரம்பு, விருப்பத்திற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset