நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட் 2026: 3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திவேட் பயிற்சிகளை எச்ஆர்டி கோர்ப் வழிநடத்தும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

2026 பட்ஜெட்டில் திவேட் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில், எச்ஆர்டி மிகப்பெரிய ஒதுக்கீடுகளைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

எதிர்காலத் துறையில் மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்க மொத்தம் 3 பில்லியன் ரிங்கிட் பயிற்சிக்கான நிதி வழங்கப்படுகிறது.

புதுமை, எதிர்காலத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப, உயர் தொழில்நுட்பம், டிஜிட்டல், எரிசக்தி மாற்றத் துறைகளில் கவனம் செலுத்தும் மூன்று மில்லியன் பயிற்சி வாய்ப்புகளை எச்ஆர்டி கோர்ப் வழங்கும்.

எச்ஆர்டி கோர்ப்பின் கீழ் பயிற்சி அளிப்பது தொழில்நுட்பம், உலகளாவிய போட்டித்தன்மையை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகமான மலேசிய தொழிலாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும்.

நேற்று நாடாளுமன்றத்தில் 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

முன்னதாக நாடு முழுவதும் பயிற்சி மற்றும் திறன் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக, திவேட்டிற்க்கான ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை 7.5 பில்லியன் ரிங்கிட்டில் இருந்த 7.9 பில்லியன் ரிங்கிட்டாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது என்று நிதியமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset