நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்ச நிலைமாநாட்டில் மியான்மா தேர்தல் திட்டங்கள் விவாதிக்கப்படும்: ஹசான்

கோலாலம்பூர்:

ஆசியான் உச்ச நிலைமாநாட்டில் மியான்மார் தேர்தல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

இந்த மாத இறுதியில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில், மியான்மாரின் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்கள், ஆசியான் உறுப்பு நாடுகளை தேர்தல் பார்வையாளர்களை அனுப்புமாறு அழைப்பது குறித்து மலேசியா எழுப்பும்.

மியானமார்  வரவிருக்கும் தேர்தல்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்புடன் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, நம்பகமான முறையில் நடத்த வேண்டும்.

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நே பி தாவிற்கு மேற்கொண்ட பணி விஜயத்தின் போது, ​​தேசிய அமைதி, பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும் மியானமாரின் தற்காலிக அதிபருமான மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங், பிரதமர், தேசிய திட்டமிடல் அமைச்சர் யு நியோ சா மற்றும் வெளியுறவு அமைச்சர் யு தான் ஸ்வே ஆகியோருடனான சந்திப்பில் ஹசான் இந்த நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset