நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி திவேட் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும்: டத்தோ இப்ராஹிம் ஷா

கோலாலம்பூர்:

2026 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி திவேட் துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும்.

டேஃப் கல்லூரியின் நிர்வாகி டத்தோ இப்ராஹிம் ஷா இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டின் கீழ் தொழில்நுட்ப, தொழிற்கல்வி பயிற்சி திவேட்டிற்க்காக மொத்தம் 7.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

கடந்த முறை இந்த தொகை 7.5 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.

நாடு முழுவதும் பயிற்சி மற்றும் திறன் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த அறிவிப்பை திவேட் தொழில் துறையினர் பெரிதும் வரவேற்கின்றன்.

காரணம் இதன் மூல
புதுமை, எதிர்காலத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப, உயர் தொழில்நுட்பம், டிஜிட்டல், எரிசக்தி மாற்றத் துறைகளில் கவனம் செலுத்த முடியும்.

குறிப்பாக உலகளாவிய போட்டித்தன்மையை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகமான மலேசிய தொழிலாளர்கள் தயார் செய்ய முடியும்.

இவ்வேளையில் பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset