
செய்திகள் சிந்தனைகள்
ஒவ்வொரு நாட்டிலும் அந் நள்ர் போன்றவர்கள் இருக்கிறார்கள்; மக்களை பொய் சொல்லி திசை திருப்புகிறார்கள்: வெள்ளிச் சிந்தனை
அந்நள்ர் இப்னுல் ஹாரிஸ். குறைஷிக் கோத்திரத்தின் மகா பிரபு. பணபலம் படைத்தவன். பாரசீகம், ஈராக் முழுவதும் பயணம் செய்த ஒரு வணிகர். ஆயினும் என்ன? இஸ்லாத்தின் பரம எதிரி.
மக்காவில் நபி (ஸல்) அவர்களை மக்கள் நம்பத் தொடங்கியதும் இவன் கோபமடைந்தான். எனவே மக்களை திசை திருப்ப ஒரு நாடக திட்டத்தை வகுத்தான்.
பெண் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் கொண்ட ஒரு குழுவை அழைத்து வந்து, கஅபாவுக்கு அருகிலும் நபிகளார் எங்கெல்லாம் செல்கிறார்களோ அந்த இடங்களுக்கும் சென்று நடன விருந்துகளை நடத்தினான்.
மட்டுமல்ல.. பண்டைய புராணக் கதைகள், தனது பயணங்களில் கேட்ட கதைகளை மக்களுக்குச் சொல்ல, கதை சொல்லிகளையும் அழைத்து வந்தான்.
நபிகளாரின் அழைப்பில் இருந்து மக்களை திசை திருப்பவும், விலக்கவும் அவன் செய்த முயற்சிகள் இவை.
இவனது நாடக முயற்சியை குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது:
"மக்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவும் இன்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியினை ஏளனம் செய்வதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள்.இத்தைகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது'' (திருக் குர்ஆன் 31:6)
அன்று மக்காவில் ஒரேயொரு அந்நள்ர் இப்னு ஹாரிஸ்தான் இருந்தான். ஆனால் இன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் (அரபு நாடுகள் உட்பட) அவனைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் நினைவிலிருந்து மக்களை திசை திருப்ப அவர்கள் முழு பலத்துடன் முயற்சிக்கிறார்கள். சிலபோது ஆபாச விருந்துகள், சிலபோது மோசமான திரைப்படங்கள், இன்னும் சிலபோது தொலைக் காட்சி தொடர்கள் மூலம் மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்.
ஆயினும் ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால்.. அந்த அந்நள்ர் இப்னுல் ஹாரிஸ் அனைத்துக்கும் தான் உழைத்து சம்பாதித்த தமது சொந்தப் பணத்தை செலவு செய்தான்.
ஆனால் இன்றைய அந்நள்ர் இப்னு ஹாரிஸ்களோ, மார்க்கத்திலிருந்து மக்களைத் திருப்ப, சாமான்ய மக்களிடமிருந்து திருடிய பணத்தைக் கொண்டே செலவு செய்கிறார்கள்.
கேவலமான ஆட்சியாளர்கள்! மகா கேவலமான உத்திகள்!
"ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப் பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!'' (9:32)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm