நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவுக்கான 23 மலேசிய தன்னார்வலர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

சிப்பாங்:

காசாவுக்கு தன்னார்வ உதவிகளுடன் சென்ற 23 மலேசிய தன்னார்வலர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

காசாவிற்கு குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா  மனிதாபிமானப் பணியில் 23 மலேசியர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுபின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட 23 மலேசிய தன்னார்வலர்களும் இன்று இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 1இல் பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

துபாயில் இருந்து தன்னார்வலர்கள் குழுவை ஏற்றிச் வந்த எமிரேட்ஸ் இகே342 விமானம் இரவு 10.07 மணியளவில் கேஎல்ஐஏவில் தரையிறங்கியது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் தன்னார்வலர்கள் குழுவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

நாடு திரும்பிய தன்னார்வலர்களை 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் வருகை மண்டபத்தையும் நிரப்பி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset