
செய்திகள் மலேசியா
உணவகத்துறை நீண்ட நேர தொழிலாக இருந்தாலும் இந்திய இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது: டத்தோ ரெனா ராமலிங்கம்
கோலாலம்பூர்:
உணவகத்துறை நீண்ட நேர தொழிலாக இருந்தாலும் இந்திய இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
பிரிமாஸ் ஆலோசகர் டத்தோ ரெனா ராமலிங்கம் இதனை கூறினார்.
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 25ஆம் ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பல சவால்களை கடந்து இச்சங்கம் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இனி இச்சங்கம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து மலேசியர்களும் ஈர்க்கக் கூடிய உணவகமாக இந்திய உணவகங்கள் மாற வேண்டும்.
அதேவேளையில் அதிகமான இந்திய இளைஞர்கள் இந்த உணவகத்துறையில் கால் பதிக்க வேண்டும்.
உணவகத்துறை என்பது ஒரு நீண்ட நேர தொழிலாக பார்க்கப்படுகிறது.
நீண்ட நேர தொழில் என்பது உண்மைதான்.
ஆனால் இந்த தொழில் துறையின் மூலம் மிகச் சிறந்த எதிர்காலம் இந்திய இளைஞர்களுக்கு உள்ளது.
அதே வேளையில் எடுத்த உடனே பெரிய அளவில் உணவகத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நாங்கள் எல்லாம் ஆரம்பத்தில் சின்ன தொழிலாக தான் இந்த வியாபாரத்தை தொடங்கினோம்.
சுவையான உணவு, நியாயமான விலை, சுத்தமான உணவுகள், மக்களின் ஆதரவு ஆகியவை எங்களின் வியாபாரத்துக்கு வெற்றியாக அமைந்தது.
இதுபோன்று இந்திய இளைஞர்களும் சின்னதாக தொழிலை தொடங்கி அதன் மூலம் பெரிய அளவில் சாதிக்கலாம்.
குறிப்பாக உணவகத்துறையில் கால் பதித்தவர்கள் இன்று பெரிய ஹோட்டல்கள் வரை தொழிலை விரிவுப்படுத்தி உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆக எந்த தொழிலையும் கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று டத்தோ ரெனா ராமலிங்கம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 8:35 pm
ஊழல் விசாரணையில் மலேசிய, சிங்கப்பூரை சேர்ந்தவர்களை எம்ஏசிசி தேடுகிறது
October 7, 2025, 4:39 pm
இந்திய உணவகங்களில் வேலை செய்ய 8,000 தொழிலாளர்கள் தேவை: டத்தோ சுரேஸ் கோரிக்கை
October 7, 2025, 3:41 pm
டிரம்பின் வருகை ஆட்சியாளர்கள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது: பிரதமர்
October 7, 2025, 3:40 pm
மதுபானங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கத்தின் உறுதியாக உள்ளது: பிரதமர்
October 7, 2025, 1:19 pm
தீபாவளியின் போது தேர்வுகள்; இந்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது: கணபதிராவ்
October 7, 2025, 1:18 pm
பிரதமர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் அமர்வு இல்லை
October 7, 2025, 1:17 pm