
செய்திகள் மலேசியா
மதுபானங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கத்தின் உறுதியாக உள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
மதுபானங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கத்தின் உறுதியாக உள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
உலகளாவிய பயணக் கூட்டத்துடன் இணைந்து நடந்த இரவு விருந்தின் போது மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங், தொடர்புடைய அமைச்சுகளுக்கு நான் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன்.
அரசு நிகழ்வுகளில் கண்டிப்பாக மதுபானங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்பது அரசாங்கக் கொள்கையாகும்.
ஆக அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் முடிந்த பின்னரே மதுபானங்கள் வழங்கப்படும் என்ற அமைச்சின் விளக்கம் பொருத்தமற்றது.
அமைச்சு அளித்த விளக்கம் என்னவென்றால், இது அதிகாரப்பூர்வ நிகழ்வு முடிந்த பிறகு நடந்தது
ஆனால் இடம், விழா ஒரே மாதிரியாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்று விளக்கம் அளித்திருந்தாலும், அது முற்றிலும் பொருத்தமற்றது.
இந்தத் தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அமைச்சருக்கும் அமைச்சிற்கும் நாங்கள் கடுமையாக எச்சரித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 4:39 pm
இந்திய உணவகங்களில் வேலை செய்ய 8,000 தொழிலாளர்கள் தேவை: டத்தோ சுரேஸ் கோரிக்கை
October 7, 2025, 3:41 pm
டிரம்பின் வருகை ஆட்சியாளர்கள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது: பிரதமர்
October 7, 2025, 1:19 pm
தீபாவளியின் போது தேர்வுகள்; இந்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது: கணபதிராவ்
October 7, 2025, 1:18 pm
பிரதமர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் அமர்வு இல்லை
October 7, 2025, 1:17 pm