
செய்திகள் மலேசியா
இந்திய உணவகங்களில் வேலை செய்ய 8,000 தொழிலாளர்கள் தேவை: டத்தோ சுரேஸ் கோரிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள இந்திய உணவகங்களில் வேலை செய்ய இன்னும் 8,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தெரிவித்தார்.
மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வாய்ப்பளித்தாலும் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண முடியாது.
பணிக்கான ஒப்பந்தம் காலம் முடிந்து தாயகம் திரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக Check Out Mamo மூலம் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதை நமது உறுப்பினர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
அதேசமயம் மடானி அரசாங்கம் குறைந்தது 8,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் ரினைசன்ஸ் தங்கும் விடுதியில் பிரிமாஸ் 25 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா இராமலிங்கம், முத்துசாமி திருமேனி, பெலித்தா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ ரமேஷ் முருகன் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஜவஹார் அலி, மலேசிய இந்திய உலோக பொருள் மறுமலர்ச்சி சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ பார்த்தீபன், கோபியோ தலைவர் குணசேகரன், சிலாங்கூர் - கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஷ் ராகவன், மைக்கி செயலாளர் தட்சணாமூர்த்தி, பினாங்கு மாநில ம இகா தலைவர் டத்தோ தினகரன் உட்பட 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 8:35 pm
ஊழல் விசாரணையில் மலேசிய, சிங்கப்பூரை சேர்ந்தவர்களை எம்ஏசிசி தேடுகிறது
October 7, 2025, 3:41 pm
டிரம்பின் வருகை ஆட்சியாளர்கள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது: பிரதமர்
October 7, 2025, 3:40 pm
மதுபானங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கத்தின் உறுதியாக உள்ளது: பிரதமர்
October 7, 2025, 1:19 pm
தீபாவளியின் போது தேர்வுகள்; இந்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது: கணபதிராவ்
October 7, 2025, 1:18 pm
பிரதமர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் அமர்வு இல்லை
October 7, 2025, 1:17 pm