நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் விசாரணையில் மலேசிய, சிங்கப்பூரை சேர்ந்தவர்களை எம்ஏசிசி தேடுகிறது

புத்ராஜெயா:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவ ஒரு சிங்கப்பூர் ஆணையும் மலேசியப் பெண்ணையும்  தேடுகிறது.

இன்று எம்ஏசிசி வெளியிட்ட ஒரு அறிக்கையில்,  சம்பந்தப்பட்ட நபர்களில் போ போ லியான் ஒரு சிங்கப்பூரர் ஆவர்.

கோலாலம்பூரில் உள்ள பி-47-3, பெவிலியன் குடியிருப்பு 2, ஜாலான் ராஜா சூலன் என்ற முகவரியில் அவர் ஆகக் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட முகவரியைக் கொண்டிருந்தார்.

மேலும் மலேசியரான ஜெனிஃபர் கோக் சாவ் கெங் என்பவரும் தேடப்படுகிறார்.

அவரது கடைசி முகவரி பி-24-03, அபாடி வில்லா, ஜாலான் 3/109சி, கோலாலம்பூரில் உள்ள ஆஃப் ஜேஎல்என் கிளாங் லாமா என்ற முகவரியாகும்.

இருவரையும் அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஸ்டீபன் லூ ஹ்சியன் யாங்கை 017-902 8199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அல்லது stefan@sprm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset