
செய்திகள் மலேசியா
மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய பன்னீர் செல்வத்தின் இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது
சிங்கப்பூர்:
மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய பன்னீர் செல்வத்தின் இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா பிரதிநிதி கிஸ்டினா ஜோஹாரி இதனை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் எஞ்சியிருக்கும் கடைசி மலேசிய கைதியான பி. பன்னீர் செல்வம் விளங்குகிறார்.
அவரின் மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக இப்போது தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் நாளை மரணதண்டனை தொடர வாய்ப்புள்ளது.
இன்று இரவு சிங்கப்பூர் தூதரக வளாகத்திற்கு வெளியே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூர் தூதரகத்தின் வெளியே கிட்டத்தட்ட 100 ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூடி, பன்னீர் செல்வத்தின் சார்பாக கருணை கோரினார்கள்.
அதே நேரத்தில் சிங்கப்பூர் மரணத் தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 11:56 pm
காசாவுக்கான 23 மலேசிய தன்னார்வலர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
October 7, 2025, 8:35 pm
ஊழல் விசாரணையில் மலேசிய, சிங்கப்பூரை சேர்ந்தவர்களை எம்ஏசிசி தேடுகிறது
October 7, 2025, 4:39 pm
இந்திய உணவகங்களில் வேலை செய்ய 8,000 தொழிலாளர்கள் தேவை: டத்தோ சுரேஸ் கோரிக்கை
October 7, 2025, 3:41 pm
டிரம்பின் வருகை ஆட்சியாளர்கள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது: பிரதமர்
October 7, 2025, 3:40 pm