நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் அந்நிய நாட்டினர் ஆக்கிரமிக்கும் தீபாவளி சந்தைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது: பாப்பாராயுடு

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் அந்நிய நாட்டினர் ஆக்கிரமிக்கும் தீபாவளி சந்தைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக தொழிலியல் சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் என்னை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் முக்கியமான இரு பிரச்சினையை முன்வைத்தார்.

அதாவது தீபாவளியை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான தீபாவளி கண்காட்சி, சந்தைகள் நடத்தப்படுகிறது.

குறிப்பாக பெரிய அளவில் நடத்தப்படும் சந்தைகளில் அந்நிய நாட்டினர் தான் வியாபாரம் செய்து லாபம் அடைகின்றனர்.

இதனால் உள்ளூர் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர் என்று அவர் கூறினார்.

அவரின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்றாகும்.
காரணம் இங்குள்ள வியாபாரிகள் காலங்காலமாக முறையாக வரி செலுத்தி வியாபாரம் செய்கின்றனர்.

ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அரசாங்கத்திற்கு எந்த ஒரு வரி கட்டணமும் செலுத்தாமல் ஆபத்தை மட்டும் கொண்டு செல்கின்றனர்.

ஆக இந்த விவகாரம் உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் கிள்ளான், ஷாஆலம் டத்தோ பண்டாருக்கு ஒரு கடிதம் அனுப்ப உள்ளேன்.

அதில் அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கும் தீபாவளி சந்தைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது என  அக்கடிதத்தில் குறிப்பிடப்படும்.

அதே வேளையில் நமது உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்யும் வியாபார சந்தைகளுக்கு உரிய அனுமதிகளை வழங்க வேண்டும்.

இதன் மூலம் நமது உள்ளூர் வியாபாரிகள் பயனடைவார்கள் என்று பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset