செய்திகள் விளையாட்டு
மலேசியாவின் ஏழு கால்பந்து வீரர்களின் அசல் பிறப்பு ஆவணங்களை FIFA வெளியிட்டது
ஜூரிச்:
மலேசியாவின் ஏழு கால்பந்து வீரர்களின் அசல் பிறப்பு ஆவணங்களை வெளியிட்டு ஃபிஃபா பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய கால்பந்து அணியில் இணைந்துள்ள 7 மலேசிய ரத்த உறவுகளை கொண்ட வீரர்களின் விவகாரம் அனைத்துலக ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மலேசிய கால்பந்து சங்கம், ஏழு வீரர்களை தண்டிக்கும் முடிவின் முழு விவரங்களையும் ஃபிஃபா இறுதியாக வெளியிட்டுள்ளது.
இதில் அவ்வீரர்களின் அசல் பதிவு ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றைய தேதியிட்ட "முடிவின் அடிப்படைகள் குறித்த அறிவிப்பு" என்ற தலைப்பிலான அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,
மோசடி, அதிகாரப்பூர்வ ஆவணங்களை மாற்றியமைத்தல் தொடர்பான பிரச்சினையை உள்ளடக்கிய பிபா ஒழுங்குமுறைக் குறியீட்டின் பிரிவு 22 இன் மீறலின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டதாக அதன் ஒழுங்குமுறைக் குழு விளக்கியுள்ளது.
பிபாவில் சமர்ப்பித்த வீரர்களின் தாத்தா பாட்டிகளின் பல பிறப்புச் சான்றிதழ்கள் அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் பொருந்தவில்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
வெளிநாட்டு சிவில் பதிவு அதிகாரிகளுடனான குறுக்கு சோதனைகளின் முடிவுகள், பிபாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வீரர்களின் தாத்தா பாட்டி என்று பெயரிடப்பட்ட நபர்கள் மலேசியாவில் பிறக்கவில்லை என்பதைக் காட்டியது.
அறிக்கையின் பின் இணைப்பு 13 இல், சம்பந்தப்பட்ட ஏழு வீரர்களின் உண்மையான குடும்பத் தோற்றத்தை பிபா பட்டியலிட்டுள்ளது:
கேப்ரியல் பெலிப் அரோச்சாவின் பாட்டி ஸ்பெயினின் சாண்டா குரூஸ் டி லா பால்மாவில் பிறந்தார்.
டத்தோ ஃபாகுண்டா தோமஸ் அர்ஜெண்டினாவின் சாந்தா ஃபி நகரைச் சேர்ந்தவர்.
டத்தோ ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்கடோ அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்தார்.
இமானோல் ஜேவியர் மச்சுகாவின் பாட்டி அர்ஜெண்டினாவின் ரோல்டானைச் சேர்ந்தவர்.
டத்தோ ஜோ விதோர் பிரேசிலின் அப்ரே காம்போவைச் சேர்ந்தவர்.
டத்தோ ஜான் இராசபால் இரௌர்குய் ஸ்பெயினின் விஸ்காயாவில் பிறந்தார்.
டத்தோ ஹெக்தர் அலெக்ஜான்ரொ
நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிறந்தார்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
மலேசியாவுடன் நேரடி தொடர்பைக் காட்டும் எந்த உண்மையான ஆதாரமும் இல்லை என்றும் ஃபிஃபா விளக்கியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 7, 2025, 11:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் தோல்வி
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
