நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி தலைமையேற்பார்

போனஸ் அயர்ஸ்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு லியோனல் மெஸ்ஸி தலைமையேற்கவுள்ளார்.

நிர்வாகி லியோனல் ஸ்கலோனி இன்று தனது 26 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணியை அறிவித்தார்.

இதைத்  தொடர்ந்து, உலகக் கிண்ண போட்டியில் அர்ஜென்டினாவை வழிநடத்தப் போவது லியோனல் மெஸ்ஸி என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
38 வயதான மெஸ்ஸி.தனது ஆறாவது உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பில் பங்கேற்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இது அந்த அர்ஜெண்டினா நட்சத்திரத்திற்கு ஒரு புதிய சாதனையாகும்.

இருப்பினும், எட்டு முறை பலோன் டி ஓர் விருது வென்ற இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாரில் வென்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் அர்ஜெண்டினாவை மீண்டும் வழிநடத்துவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.

மெஸ்ஸியின் இருப்பை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்த அறிவிப்பில் ரியல் மாட்ரிட் இளம் வீரர் பிரான்கோ மஸ்டான்டுவோனோ அர்ஜெண்டினா அணியில் இடம்பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

வெறும் 18 வயதே ஆன மஸ்டான்டுவோனோ, தற்போது அர்ஜெண்டினா கால்பந்தாட்டத்தின் மிகச் சிறந்த எதிர்கால வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset